செவ்வாய், 18 செப்டம்பர், 2012


1980 பதுகளில் பிரபாகரணை எவ்வாறு மிரட்டினார்கள் இந்திய இராணுவம்: வீடியோ காட்சி !

1980 பதுகளில், சமாதானப் பேச்சு என்றுகூறி இந்தியாவுக்கு அழைக்கப்பட்ட தேசியதலைவர் பிரபாகரனுடன், இந்திய இராணுவம் முதலில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பின்னர் தமது நோக்கம் பலிக்காமல் போகும்போது மிரட்டல் பாணியில் பேச ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் இந்திய இராணுவ அதிகாரி ஒருவர், உங்களுக்கு பிள்ளைகள் இருக்கிறார்கள், அவர்கள் வளர்ந்து பெரிய ஆட்கள் ஆகவேண்டும், அவர்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று, பிள்ளைகளை ஒரு பணயமாக வைத்து பிரபாகரனை மிரட்டுகிறார். இதனை தமிழர் ஒருவர் மொழிபெயர்க்கிறார்.

இதனை உடனே விளங்கிக்கொண்ட தேசியதலைவர், நீங்களும் ஒரு இராணுவ வீரர் தானே. உங்களுக்கும் பிள்ளைகள் இருக்கும். கடமை என்று வரும்போது அதனை என்னால் பார்க்கமுடியாது, இதனை உங்கள் அதிகாரிக்குச் சொல்லுங்கள் என்கிறார். 1980 பதுகளில் நடைபெற்ற இப் பேச்சுவார்த்தையின் வீடியோ இணைக்கப்பட்டுள்ளது. தேசிய தலைவரது மன உறுதியை எடுத்துக்காட்டும் இக் காணொளியைப் பாருங்கள்.