சனி, 21 ஏப்ரல், 2012

தமிழுடன் தொடங்கும் இலண்டன் ஒலிம்பிக் விளம்பரம் ! தமிழின் முக்கியத்துவத்தையும் அதன் வரலாற்றையும் சிறப்பிக்கும் பொருட்டு இலண்டனில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கான விளம்பரத்தில் வணக்கம் என தமிழ் மொழியுடன் ஆரம்பிக்கும் ஒலிம்பிக் விளம்பரம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பிரித்தானியாவில் நடந்தாலும் ஆங்கிலத்திற்கு முன் உரிமை கொடுக்காமல் தமிழுக்கு பெருமை சேர்த்துள்ளார்கள். பிரித்தானியா வாழ் தமிழர்கள் மட்டுமல்லாது உலகவாழ் தமிழர்களுக்கு அளிக்கப்பட்ட சிறந்த மரியாதை இது எனக் கருதப்படுகிறது. லண்டனில் 2012 ஜூலைமாதம் நடைபெறவுள்ள ஒலிம்பிக்போட்டிகளுக்கான விளப்பர வீடியோவிலேயே இக் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. காணொளியைப் பாருங்கள் !

பேசிப்பேசிச் சீரழித்த திராவிடத்தின் காலத்தில் பேசாமல் பேசவைத்தவனின் பெருமை;இவன் பெருமையில் தூசளவும் இல்லாத திராவிடம் பாறைபோலத் தமிழர் தோளில் இருக்கலாமா? "தேனிசையாலே அவன் புகழைப் பாட்டாக்குவோம் அவன் திசையிருந்து வரும் காற்றை மூச்சாக்குவோம்" இந்த அருமையான இசைப்பாடலை என்றும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

ஞாயிறு, 15 ஏப்ரல், 2012

தேசியத் தலைவரின் பத்திரிகையாளர் மாநாடு – (முழுமையான காணொளி)

2002 ஏப்ரல் மாதத்தின் 10ம் நாள் சிங்கள தேசத்தின் ஊடகங்கள் அனைத்தும், இந்தியாவின் அச்சு, ஓலி, ஒளி, இலத்திரனியல் ஊடகங்கள் முழுதும், சர்வதேசத்தின் மிகமுக்கியமான ஊடகநிறுவனங்கள் எல்லாம் கிளிநொச்சியில் குழுமி இருந்தனர்.

தமிழர்களின் வரலாற்றில் ஒரு தமிழனின் செய்திக்காக அவர் சொல்லப்போகும் பதில்களுக்காக ஒரே நேரத்தில் இவ்வளவு பத்திரிகையாளர்களும், ஊடகங்களும் குழுமியது வரலாற்றில் முதலாவதானது. அதனைவிட சிங்களதேசத்தின் அதிபர்கள் நடாத்திய எந்தவொரு ஊடகவியலாளர் சந்திப்பிலும் அதுவரை இவ்வளவு பெருந்திரளாக வந்ததே இல்லையென்றே சிங்கள ஊடகங்கள்கூட வர்ணித்திருந்தன.





























தேசியத் தலைவரின் பத்திரிகையாளர் மாநாடு – (முழுமையான காணொளி)



நன்றிகள்:-தமிழீழம்,கரிகாலன்

செவ்வாய், 3 ஏப்ரல், 2012

<>அணுவுலை.......பாடல்<>

மின்சாரம் உருவாக்க எத்தனையோ வழியிருக்க
அனுவுலையின் அழிவுகண்டும் அனுமதி ஏன் அளித்துவிட்டார்?

கேட்கின்றது "நெய்தலின் பாடல்". தவறாமல் கேளுங்கள்.